“ஜாக்கி” திரைப்படத்தின் டீசர் வெளியானது
மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு ‘ஜாக்கி’ திரைப்படம் உருவாகியுள்ளது.;
யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள‘ஜாக்கி’ மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது.
மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான 'மட்டி' திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜாக்கி’. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் 'ஜாக்கி', மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் உருவாகியுள்ளது.
‘ஜாக்கி’ திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான 'மட்டி' திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார்.