“பகவந்த் கேசரி” பட இயக்குநரின் படத்துடன் மோதும் “ஜன நாயகன்”

‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் இயக்குநர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் 12ம் தேதி திரைக்கு வருகிறது.;

Update:2026-01-04 20:25 IST

நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரையும் கவர்ந்தாலும் இப்படம் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கில் ஹிட் அடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. பகவந்த் கேசரி’ படத்தின் மையக் கதையை எடுத்துக்கொண்டு விஜய்க்கு ஏற்ப மாறுதல்களும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் வரும் 9ம் தேதி திரைக்கு வருகிறது. அதே போல, இயக்குநர் அனில் ரவிபுடி, நடிகர் சிரஞ்சீவி கூட்டணியில் உருவான, ‘மன ஷங்கர வர பிரசாத் காரு’ திரைப்படமும் சங்கராந்தி வெளியீடாக வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இது சிரஞ்சீவியின் 157வது படமாகும். இப்படத்தில் நயன்தாரா, கேத்தரின் தெரசா நடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்