'ஜனநாயகன் பட அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும்'- மமிதா பைஜு

விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வரும் மமிதா, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக "இரண்டு வானம்" என்ற படத்திலும் நடிக்கிறார்.;

Update:2025-03-17 10:40 IST

சென்னை,

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மமிதா பைஜு, தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ரெபல்' படத்தில் அறிமுகமானார்.

தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வரும் இவர், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக "இரண்டு வானம்" என்ற படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். ராம் குமார் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின.

இந்நிலையில், கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில், நடிகர் விஷ்ணு விஷால், மமிதா பைஜு மற்றும் இயக்குனர் ராம் குமார் ஆகியோர் கலந்துகொண்டணர். அப்போது பேசிய விஷ்ணு விஷால், முதல்முறையாக ஒரு முழு காதல் படத்தில் நடிப்பதாக கூறினார். தொடர்ந்து மமிதா பேசுகையில், 'வரும் நாட்களில் ஜனநாயகன் பட அப்டேட்டுகள் வெளிவரும்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்