அதிகரித்து வரும் புகழ்...சம்பளத்தை உயர்த்தும் ஜான்வி கபூர்?
புகழ் அதிகரித்து வருவதால், வரவிருக்கும் படங்களுக்கு ஜான்வி இன்னும் அதிக சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது.;
சென்னை,
பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் ஜான்வி கபூர் பிரபலமடைந்து வருகிறார். ''தேவரா'' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக அறிமுகமான பிறகு, தற்போது அவர் தனது 2-வது தெலுங்கு படமான ''பெத்தி''ல் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து இவர் பல பான்-இந்திய தெலுங்கு படங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதில் ஏஏ22xஏ6 படமும் அடங்கும். இருப்பினும், அது இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
இப்போது, அவரது புகழ் அதிகரித்து வருவதால், வரவிருக்கும் படங்களுக்கு அவர் இன்னும் அதிக சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது. ''தேவரா'' படத்திற்காக அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் வழங்கப்பட்டநிலையில், ''பெத்தி'' படத்திற்கு ரூ. 1 கோடி உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.