4 ஆண்டுகளுக்குப் பிறகு...புதிய ஆல்பத்தை வெளியிட்ட ஜஸ்டின் பீபர்

ஜஸ்டின் பீபர் தனது ஏழாவது ஆல்பமான ஸ்வாகை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-07-13 10:41 IST

மும்பை,

தனது ஆறாவது ஆல்பமான 'ஜஸ்டிஸ்' வெளியான 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜஸ்டின் பீபர் தற்போது 'ஸ்வாக்' என்ற புதிய ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த இவரின் முதல் ஆல்பம் 'மை வேர்ல்டு' கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது.

இதன் பின்னர் வெளியான பேபி, லவ் யுவர்செல்ப், சாரி, லவ் மீ போன்ற பாடல்கள் மூலம் உலகளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அவர் தனது ஆறாவது ஆல்பமான ஜஸ்டிஸை 2021 இல் வெளியிட்டார்.

அதன்பின்னர், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய சலசலப்புகள் உருவாகின. இந்நிலையில், இதற்கு மத்தியில், ஜஸ்டின் பீபர் தனது ஏழாவது ஆல்பமான ஸ்வாகை வெளியிட்டுள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்