''கைதி 2'' - அனுஷ்கா நடிக்கவில்லை...வெளியான முக்கிய அப்டேட்

''கூலி'' படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அப்பட வெளியீட்டிற்கு பிறகு கைதி 2 படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.;

Update:2025-06-15 15:37 IST

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ''கைதி 2'' படத்தை இயக்க உள்ளார். இதனால், இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி பெண் தாதாவாக நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வரும்நிலையில், அவர் நடிக்கவில்லை என்று முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அனுஷ்காவை இந்த படத்துடன் இணைத்து வதந்திகள் பரவியிருந்தாலும், அவரை ஒருபோதும் அணுகவில்லை என்று குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ''கூலி'' படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அப்பட வெளியீட்டிற்கு பிறகு கைதி 2 பட பணிகளைத் தொடங்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்