ரீ-ரிலீஸாகும் கமலின் “நாயகன்”

நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாயகன்’ படத்தை வரும் நவம்பர் 6ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2025-10-01 14:47 IST

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ‘நாயகன்’. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மும்பையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேலுநாயக்கர் என்கிற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த படமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்தக் காலத்தில் மும்பையில் நிழலுக தாதாவாக இருந்த வரதராஜன் முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவானதாக கூறப்படுகிறது. படத்தில் தன்னை அடித்த காவல் துறை அதிகாரியைப் பார்த்து ‘நான் அடிச்சா நீ செத்துடுவ’ என கமல் சொல்லும் அந்த ஒற்றை வசனம் கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த கோபத்துடன் கூடிய வீரத்தை வெளிப்படுத்தியிருக்கும்.

 இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் தேதி ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்