ஆர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு பூஜை
ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.;
ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது 'மிஸ்டர் எக்ஸ்' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘சர்பட்டா’ இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்யாவின் பிறந்தநாளான நேற்று அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை நடைபெற்றது.
நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், “ராஜா ராணி படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவின் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.