கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் அப்டேட்

'வா வாத்தியார்' படத்தில் நடிகர் கார்த்தி, எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார்.;

Update:2025-05-24 21:51 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். அதனைத்தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'வா வாத்தியார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'வா வாத்தியார்' படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'உயிர் பத்திக்காம' பாடல் வெளியானது.ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி ஏறத்தாழ படப்பிடிப்புகள் நிறைவடைந்து நிலையில் இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்களும், டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்பது போன்ற பேச்சுகள் அடிபடுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது நாளை நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் 'வா வாத்தியார்' படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த போஸ்டரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்