கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் புரோமோ வெளியீடு

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஆரோமலே’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.;

Update:2025-05-29 20:46 IST

சென்னை,

பிரபல யூடியூபரான கிஷன் தாஸ் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே 'முதலும் நீ முடிவும் நீ' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அதே சமயம் யூடியூபர் ஹர்ஷத் கான், விஜே சித்துவுடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.

இந்நிலையில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாரங் தியாகு இந்த படத்தை இயக்க சித்து குமார் இதற்கு இசையமைக்கிறார். கௌதம் ராஜேந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆரோமலே' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் தொடர்பாக தற்போது புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கலகலப்பான, வித்தியாசமான இந்த புரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்