20 கோடி பார்வைகளை கடந்த “குட்டி பட்டாஸ்” பாடல்

சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் 20 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.;

Update:2025-09-25 18:13 IST

சென்னை ,

‘குக் வித் கோமாளி’ மற்றும் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் அஸ்வின். இவர் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடித்த ‘செம்பி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை ஹரிஹரன் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வெளியானது. அ.ப. இராசா வரிகளில், சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து இருந்தார். 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.

இந்நிலையில், ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் 20 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்