பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார்

பாலசரஸ்வதி தேவி தெலுங்கு திரையுலகின் முன்னணி பாடகியாக விளங்கியவர்.;

Update:2025-10-15 20:27 IST

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார். அவருக்கு வயது 97. வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பால சரஸ்வதி தேவி இன்று காலை உயிரிழந்ததாகஅவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பாலசரஸ்வதி தேவி தெலுங்கு திரையுலகின் முன்னணி பாடகியாக விளங்கினார்.

“சதி அனுசுயா” எனும் திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான பாலசரஸ்வதி தேவி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 2,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். பாலசரஸ்வதி தேவியின் மறைவுக்கு தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்