'ஜெயிலர் 2' அறிவிப்பு டீசரின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

'ஜெயிலர் 2' படத்தின் அறிவிப்பு டீசரின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update:2025-01-17 14:01 IST

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'ஜெயிலர் 2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது.


இந்த நிலையில், 'ஜெயிலர் 2' படத்தின் அறிவிப்பு டீசரின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். புரோமோ வீடியோவில் அனிருத் மற்றும் நெல்சன் இடம் பெற்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்