'ஹிருதயப்பூர்வம்' - மோகன்லால், மாளவிகா மோகனனின் பர்ஸ்ட் லுக் வெளியானது

இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-05-21 16:33 IST

சென்னை,

நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஹிருதயப்பூர்வம்' படத்திலிருந்து மோகன்லாலின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

மோகன்லால், 'தொடரும்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் 'ஹிருதயப்பூர்வம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் , சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் மோகன்லால் இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், 'ஹிருதயப்பூர்வம்' படத்திலிருந்து மோகன்லால், மாளவிகா மோகனன் மற்றும் சங்கீத் பிரதாபின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்