மோகன்லாலின் “ஹிருதயப்பூர்வம்” படத்தின் முதல் நாள் வசூல் விவரம்

மோகன்லால், மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘ஹருதயப்பூர்வம்’ படம் முதல் நாளில் ரூ.3.25 கோடி வசூலித்துள்ளது.;

Update:2025-08-30 17:06 IST

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் கண்ணப்பா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மோகன்லால் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகி வந்த ‘ஹருதயப்பூர்வம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் . இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, பிரேமலு புகழ் காமெடி நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சங்கீதா, சித்திக், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கடந்த 2015ல் சத்யன் அந்திக்காடு-மோகன்லால் கூட்டணியில் வெளியான‘என்னும் எப்பொழுதும்’ படத்தை தொடர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் வெளியாவதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ஒரு பீல் குட் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதால் படத்தை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். திரைப்படம் வெளியான முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் முதல் நாளில் ரூ.3.25 கோடி வசூலித்துள்ளது. மலையாள திரைப்படங்களில் அதிகம் வசூலித்த ஓபனிங்கில் ஹிருஹயபூர்வம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்