ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் மோகன்லாலின் புதிய படம்
மோகன்லால் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'துடரும்'.;
திருவனந்தபுரம்,
தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'துடரும்'. மிகப்பெரிய புரமோசன் எதுவும் இல்லாமல் வெளிவந்திருக்கும் இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
திரிஷ்யம் போலவே பேமிலி திரில்லரில் 'துடரும்' கலக்குவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஓஜி மீண்டும் வந்துவிட்டார் எனவும் தரமான பேன்பாய் சம்பவம் எனவும் புகழ்ந்துவருகின்றனர்.
இதற்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான 'எல் 2 எம்புரான்' படம் வசூலை குவித்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.