சந்தீப் ரெட்டி வங்காவுக்கு நன்றி கூறிய 'சயாரா' இயக்குனர்
'சயாரா' படம் இதுவரை ரூ. 170 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.;
சென்னை,
இயக்குனர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர் அஹான் பாண்டே , நடிகை அனீத் பத்தா நடித்த 'சயாரா' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் புயலை கிளப்பி இருக்கிறது.
சிறிய நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் கடந்த 18-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், மிகப்பெரிய வசூலை ஈட்டி வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 170 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
இந்நிலையில், சந்தீப் ரெட்டி வங்காவுக்கு மோஹித் சூரி நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''சயாரா'' மீது நம்பிக்கை வைத்து முதல் நபராக வெளிப்படையாக ஆதரித்ததற்கு நன்றி'' என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, சந்தீப் ரெட்டி வங்கா ''சயாரா'' படம் குறித்து வெளியிட்ட பதிவில், ''இதயப்பூர்வமான காதல் படம். முதல் நாளே இதை தியேட்டரில் பார்க்க காத்திருக்கிறேன். அறிமுக நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். இது முற்றிலும் மோஹித் சூரியின் மேஜிக்'' என்று தெரிவித்திருந்தார்.