கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் - இரண்டாவது இடத்தில் 'கல்கி 2898 ஏடி'...முதல் இடத்தில் எது தெரியுமா?
கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.;
மும்பை,
இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இதில் முதல் இடம் பிடித்த படம் ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், வருண் தவான் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ஸ்ட்ரீ 2 உள்ளது. அடுத்தபடியாக இரண்டாவது இடம் பிடித்திருப்பது 'கல்கி 2898 ஏடி'.
பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 3-வது இடம் பிடித்திருப்பது 12-த் பெயில். இப்படம் விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதேபோல், கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய வெப் தொடர்களில் முதல் இடத்தை பிடித்திருப்பது "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்". பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்த இந்த தொடரில் சோனாக்சி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதிதி ராவ் மற்றும் பலர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.