சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் நாக் அஸ்வின் ?
இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது ஒரு புதிய படத்தில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.;
சென்னை,
கல்கி 2 படம் தாமதமாகும்நிலையில், இயக்குனர் நாக் அஸ்வின் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
பெண்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரைப்பட வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஒரு தனித்துவமான கருத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.