விஜய் சேதுபதி - சம்யுக்தா படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்
இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவர் இணைந்துள்ளார்.;
சென்னை,
சந்தீப் ரெட்டி வங்காவின் “அனிமல்” படத்திற்கு இசையமைத்த தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் தற்போது பல படங்களில் பணியாற்றி வருகிறார். பிரபாஸின் “ஸ்பிரிட்” படத்திற்கும் அவர் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவர் இணைந்துள்ளார். பூரி ஜெகநாத் இயக்கும் இந்த தமிழ் - தெலுங்கு இருமொழிப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார், தபு முக்கிய வேடத்திலும் சம்யுக்தா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
தற்காலிகமாக ஸ்லம்டாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர்.