’சசிரேகா’வாக நடிக்கும் நயன்தாரா...வைரலாகும் பர்ஸ்ட் லுக்

இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.;

Update:2025-10-04 06:45 IST

சென்னை,

சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். அனில் ரவிபுடி இயக்கும் “மன சங்கர வர பிரசாத் கரு” படத்தில் அவர்கள் நடிக்கிறார்கள்.

படத்தில் சசிரேகாவாக நடிக்கும் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அவர் பளபளப்பான மஞ்சள் நிற புடவையில், குடையை ஏந்தியபடி முத்து நெக்லஸ் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட நகைகளுடன் காணப்படுகிறார்.

இது மட்டுமில்லாமல் இப்படத்தின் முதல் பாடலுக்கான புரோமோவும் வெளியாகி உள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்