பழனி முருகன் கோவிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் மலைக்கோவிலுக்கு சென்றனர்.;

Update:2025-07-03 20:42 IST

திண்டுக்கல்,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தற்போது நயன்தாரா 'மூக்குத்தி அம்மன்-2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினர் இன்று தங்கள் குழந்தைகள் உலக் மற்றும் உயிருடன் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்கள் மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர். அவர்களை சிறப்பு தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய கோவில் ஊழியர்கள் அழைத்து சென்றனர். சாமி தரிசனம் செய்த பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பிரசாதங்கள் மற்றும் சாமி படங்கள் வழங்கப்பட்டன. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்