’பாகுபலி 3’...இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி விளக்கம்
இதன் முந்தைய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்தன.;
சென்னை,
இந்திய சினிமாவில் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி: தி பிகினிங் மற்றும் பாகுபலி: தி கன்க்ளூஷன் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்தன. தெலுங்கு சினிமாவை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றன.
மேலும் பிரபாஸை இந்திய அளவில் ஒரு சூப்பர் ஸ்டாராக மாற்றின. இப்போது, இரண்டு படங்களும் "பாகுபலி: தி எபிக்" என்ற தலைப்பில் இன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் இறுதியில், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி மூன்றாம் பாகத்தை அறிவிக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக இருந்தன.
இருப்பினும், ராஜமவுலி இப்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கு பதிலாக, "பாகுபலி: தி எடர்னல் வார்" என்ற அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.