சினிமாக்காரனை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை- ஆர்.வி.உதயகுமார்
அரசியலுக்கு வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்று ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார்.;
சென்னை,
வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் ஆகியோர் தயாரிப்பில், பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் 'காக்கா முட்டை' விக்னேஷ், சோனேஸ்வரி, பேரரசு ஆகியோர் நடித்துள்ள 'சென்ட்ரல்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.
பட விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, 'சினிமாக்காரன் என்றாலே பெண் கொடுக்க யோசிப்பார்கள். மதிக்கவே மாட்டார்கள். அதேபோல சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்கிறார்கள். அப்படி யாரும் சொல்ல முடியாது.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வந்த பிறகு என்ன செய்கிறார்கள்? என்பது தான் முக்கியம். எனவே ''சினிமாக்காரனை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை'', என்றார்.