அந்த 2 நடிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் - நடிகை மீனாட்சி சவுத்ரி

அவர்கள் இருவர் மீது எப்போதும் எனக்கு ஒரு கண் உண்டு என்று நடிகை மீனாட்சி சவுத்ரி கூறியுள்ளார்.;

Update:2026-01-07 21:13 IST

கோப்புப்படம் 

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஜொலித்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி, ‘லக்கி பாஸ்கர்' படத்துக்கு பிறகு இன்னும் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மீனாட்சி சவுத்ரி, தனது சினிமா பயணம் குறித்த பல்வேறு தகவல்களை வெளிப்படையாக பேசினார்.

அப்போது ‘சினிமாவில் உங்களுக்கு எந்த நடிகர் மிகவும் பிடிக்கும்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு மீனாட்சி சவுத்ரி, "எனக்கு பிடித்த நடிகர்கள் பலரும் உள்ளனர். இருந்தாலும் குறிப்பிட்டு 2 பேரை சொல்லலாம்.

அந்த வகையில் பிரபாசின் நடிப்பும், அல்லு அர்ஜூனின் ஸ்டைலும் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறப்பான நடிப்பு, உடல் கட்டுக்கோப்பு இதை எப்படி அவர்கள் தொடர்ந்து பராமரிக்கிறார்கள் என்பதில் எனக்கு ஆச்சரியம்தான். அந்த வகையில் இருவர் மீதும் எனக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு" என்று மீனாட்சி சவுத்ரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்