அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது..விஜய்க்கு ஆதரவு அளித்த இயக்குனர்

ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.;

Update:2026-01-07 19:05 IST

சென்னை,

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன். இந்த திரைப்படம் நாளை மறுதினம் (9ம் தேதி) திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பட நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால், ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இது அதிகாரத்தை முழுமையாக தவறாகப் பயன்படுத்துதல்.. எந்தவொரு படமும் ஒரு நபரைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு படம் திரைக்கு வருவதற்கு நூற்றுக்கணக்கான மக்களின் முயற்சிகளும், பணமும் தேவைப்படுகிறது.

இது தளபதியின் படம் மற்றும் அவரது கடைசி படம், இது எப்போது வெளியானாலும் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடுவோம்!! தலைவன் படம் எப்போ வருமோ அப்போ தியேட்டர் பக்கம் போறேன். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்