ஜன நாயகன் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன்.;
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன். இந்த திரைப்படம் நாளை மறுதினம் (9ம் தேதி) திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பட நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால், ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் தீர்ப்பு நாளை மறுதினம் வெளியாகும் பட்சத்தில் அதற்கு அடுத்த நாளான 10ம் தேதி (சனிக்கிழமை) ஜன நாயகன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.