’சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நிஷாந்த் ரூஷோ நாயகனாக நடித்துள்ள ‘சொட்ட சொட்ட நனையுது’ படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.;

Update:2025-10-28 13:19 IST

நவீத் பரீத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சொட்ட சொட்ட நனையுது’. இந்த படத்தில் கதாநாயகனாக நிஷாந்த்ரூஷோ ‘சொட்டை’ தலை கெட்அப்பில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் வர்ஷினி, ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரோபோசங்கர், கல்லூரி வினோத், கலக்கப் போவது ராஜா, ஆனந்த்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பிரபலம் பிரியங்காநாயர் முதல் முறையாக இந்த படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். வழுக்கை தலையால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வருகிற 31ந் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்