'கனிமா' பாடலை ரீகிரியேட் செய்த பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் 'ரெட்ரோ' படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-04-19 18:10 IST

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 'ரெட்ரோ' படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இதில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 10,000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அப்போது நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்களுடன் இணைந்து நடனமாடி 'கனிமா' பாடலை ரீகிரியேட் செய்துள்ளார். பூஜா ஹெக்டே நடனமாடிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்