சூர்யாவின் 46-வது படத்தில் இணைந்த பிரபல நடிகை
சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார்.;
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் 46 படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இது இந்தியாவின் முதல் என்ஜின் எப்படி உருவானது என்பதைப் பற்றிய கதை என்பதால் '760 சிசி' என படத்தலைப்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க பிரபல நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் தெலுங்கில் ரவிதேஜா நடித்த 'மிஸ்டர் பச்சன்' படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.