அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
அட்லீ இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர்.;
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா-2' படம் உலக அளவில் பிரமாண்டமான வெற்றியை பெற்றது. உலக அளவில் சுமார் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. அதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கப் போவதாகவும், அட்லீயின் வெற்றிப் படங்களில் இதற்கு முன்பு நடித்திருந்த, நயன்தாரா மற்றும் சமந்தாவுக்கு அதில் வாய்ப்பு உண்டு என்றும் பேசப்பட்டது.
ஆனால் அது அனைத்தையும் பொய்யாக்கி இருக்கிறார், இயக்குனர் அட்லி. அவர் தன்னுடைய படத்தில் மிருணாள் தாக்கூர், ஜான்விகபூர் ஆகியோரை நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்றாவது நடிகையாக, பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனன்யா பாண்டேவை, அட்லி தேர்வு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.