பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம் - வெளியானது 'தி ராஜாசாப்' பட அப்டேட்

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ’தி ராஜாசாப்’ பட அப்டேட் வெளியாகி இருக்கிறது.;

Update:2025-06-02 20:32 IST

சென்னை,

பிரபாஸின் அடுத்த பெரிய படமாக 'தி ராஜாசாப்' உருவாகி வருகிறது. மாருதி இயக்கி வரும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீண்ட காத்திருப்பிற்கு பிறகு 'தி ராஜாசாப்' பட அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, நாளை காலை 10:34 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவலின் படி, வருகிற 15-ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புடன் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது..

Advertising
Advertising

இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்