பிரதீப் ரங்கநாதனின் 'எல்.ஐ.கே' படப்பிடிப்பு பணி நிறைவு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'எல்.ஐ.கே' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் 'எல்.ஐ.கே' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.