'ரெய்டு 2' பட டிரெய்லர் வெளியீடு
இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.;
மும்பை,
அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இதில் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரெய்டு படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 உருவாகியுள்ளது.
இதில், அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ராஜ் குமார் குப்தா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் வில்லனாக நடிக்கிறார்.
பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தநிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.