பாலிவுட் வெப் தொடரில் நடித்த எஸ்.எஸ்.ராஜமவுலி...வைரலாகும் டிரெய்லர்

டிரெய்லரில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.;

Update:2025-09-08 22:17 IST

சென்னை,

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கி வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருகும்நிலையில், பாலிவுட் வெப் தொடரான ​​''தி பேட்ஸ் ஆப் பாலிவுட்''-ன் டிரெய்லரில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தோற்றம் பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இந்தத் தொடரை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த வெப் தொடர் வருகிற 18-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்