74 வயதிலும் அசத்தும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ

புத்துணர்ச்சி குறையாமல் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.;

Update:2025-08-16 06:50 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

கூலி படத்தினை தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். மேலும், புதிய படத்துக்கான கதைகளையும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ரஜினிகாந்த் உடற்பயிற்சி மற்றும் யோகாசனத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தனது பட விழாக்களில் கூட அதை வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் கூட, ‘‘உடலை நாம் தண்டிக்காவிட்டால் ஒரு கட்டத்தில் உடல் நம்மை தண்டிக்க தொடங்கும். எனவே உடற்பயிற்சி செய்யுங்கள’’ என்று அவர் பேசியிருந்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. புத்துணர்ச்சி குறையாமல் அவர் உடற்பயிற்சி செய்வது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘74 வயதிலும் தலைவர் அசத்துகிறாரே...', என்று ரசிகர்கள் பாராட்டி பேசி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்