உடல் எடையை குறைத்த "கர்ணன்" பட நடிகை
தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் நடிகை ரஜிஷா விஜயன், உடை எடையை குறைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.;
சென்னை,
மலையாளத்தில் வெளியான 'அனுராக கரிக்கின் வெள்ளம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கேரளாவை சேர்ந்த ரஜிஷா விஜயன் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 'சர்தார் 2' மற்றும் துருவ் விக்ரமின் 'பைசன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ரஜிஷா விஜயன், மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாக சில இடங்களில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்தது. சமீபத்தில் ரஜிஷாவின் உடல் நிலை பிரச்னைகளால் அவரது எடை அதிகரித்தது.
இந்நிலையில், ரஜிஷா விஜயன் புகைப்படம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கும் புகைப்படத்தை அவருடைய உடற்பயிற்சியாளர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அட ரஜிஷா விஜயனா இது ஆளே மாறிவிட்டாரே என கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார்.