அஜய் தேவ்கனுடன் ரகுல்பிரீத் சிங் கவர்ச்சி நடனம்.. வைரலாகும் பாடல்

ரகுல்பிரீத் சிங் அஜய் தேவ்கனுடன் தேதே பியார் தே-2 என்ற படத்தில் நடத்துள்ளார்.;

Update:2025-10-31 23:30 IST

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார் ரகுல்பிரீத் சிங். அயலான், இந்தியன்-2 படங்களில் நடத்துள்ள ரகுல்பிரீத் சிங் சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியால் எல்லை கடந்து வருகிறார்.

இந்த நிலையில் ரகுல்பிரீத் சிங் அஜய் தேவ்கனுடன் தேதே பியார் தே-2 என்ற படத்தில் நடத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ஜூம்வுராபி என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பாடல் காட்சியில் ரகுல்பிரீத் சிங் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியால் மிரள வைத்துள்ளார். கையில் மது பாட்டிலுடனும் அவரது மார்பில் அஜய் தேவ்கன் சாய்ந்து நிற்க அவரை நெஞ்சினால் இடித்து தள்ளும் காட்சிகளில் ரசிகர்களை சூடேற்ற வைத்துள்ளார் ரகுல்பிரீத் சிங். 56 வயதான அஜய் தேவ்கனுடன் 35 வயதுள்ள ரகுல்பிரீத் சிங்கின் குத்தாட்டமும், ஆபாச நடன அசைவுகளும் ரசிகர்களின் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அஜய் தேவ்கனின் மனைவி கஜோல் பார்த்தால் என்ன ஆகும். சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா... உள்பட பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பாடலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குவிந்து வருகின்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்