மீண்டும் இணைந்த கூட்டணி - ராம் கோபால் வர்மாவின் அடுத்த படம் அறிவிப்பு
சமீபத்தில், வெளியான ராம் கோபால் வர்மாவின் ’சாரி’ திரைப்படம் தோல்வியை சந்தித்தது.;
சென்னை,
சர்ச்சைக்கு மிகவும் பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா. நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தெலுங்கில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார்.
அதன் பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார். சமீபத்தில், வெளியான அவரது 'சாரி' திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், தனது அடுத்த படத்தை ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
அதன்படி, சத்யா (1998), கவுன் (1999) மற்றும் ஷூல் (1999) ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் நடிகர் மனோஜ் பாஜ்பாயும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு "போலீஸ் ஸ்டேசன் மெய்ன் பூத்" என்று பெயரிடப்பட்டுள்ளது.