ஹாரர் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்...கவனம் ஈர்த்த பர்ஸ்ட் லுக்

இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-11-03 09:11 IST

சென்னை,

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ராம் கோபால் வர்மா தனது விருப்பமான வகையான ஹாரர் பக்கம் திரும்பியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, மனோஜ் பாஜ்பாய் கதாநாயகனாகவும், ஜெனிலியா தேஷ்முக் கதாநாயகியாகவும் நடிக்கும் போலீஸ் ஸ்டேஷன் மெய்ன் பூத் படத்தை அறிவித்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது குறித்து வெளியான பர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்துள்ளது. இருப்பினும் அவரது கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

இந்தப் படத்தை வௌவ் எமிரேட்ஸ் மீடியா புரொடக்‌சன் மற்றும் கர்மா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், போலீஸ் ஸ்டேஷன் மெய்ன் பூத் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்