'ஆர்ஏபிஓ 22' - நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.;

Update:2025-05-14 11:38 IST

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ராம் பொத்தினேனி, ஸ்கந்தா, டபுள் இஸ்மார்ட் போன்ற படங்களை தொடர்ந்து தனது 22-வது படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக 'ஆர்ஏபிஓ 22' என பெயரிடப்பட்டுள்ளது. மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில், ராம் பொத்தினேனி ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகவும் நடிகர் உபேந்திராவின் தீவிர ரசிகராகவும் நடித்திருக்கிறார்.

விவேக்-மெர்வின் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மிதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை காலை 10.08 மணிக்கு டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாக இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்