ரீ-ரிலீஸாகும் "சுந்தரா டிராவல்ஸ்"
நடிகர்கள் முரளி, வடிவேலு நடித்த 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் மே மாதம் ரீ-ரிலீஸாக உள்ளது.;
சென்னை,
2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'சுந்தரா டிராவல்ஸ்'. தஹா இயக்கத்தில் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக் ஆகும். அதனையும் தஹாதான் இயக்கி இருந்தார். இப்படத்தில் வினுசக்கரவர்த்தி, ராதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது
தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளார்கள். மே மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இதன் ரீ-ரிலீஸ் உரிமையினை சிவபெருமான் என்பவர் கைப்பற்றி இருக்கிறார். தற்போது மறுவெளியீட்டில் பல படங்கள் வெற்றியடைந்து வருவதால், இப்படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. தெரிவித்துள்ளனர்.விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது