ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா படத்தின் டைட்டில் வெளியானது

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார்.;

Update:2025-06-20 10:32 IST

சென்னை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ''கருப்பு'' என பெயரிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்