ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற சங்கமித்ரா அன்புமணி

அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா அன்புமணி நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்றுள்ளார்.;

Update:2024-12-10 16:13 IST

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா அன்புமணி தயாரிப்பாளராக தற்போது களமிறங்கியிருக்கிறார்.அதன்படி தன்னுடைய முதல் தயாரிப்பில் அலங்கு எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.பி. சக்திவேல் எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாகவும் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் , சரத் அப்பானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு எஸ் பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்ய அஜஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 27ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த், அலங்கு படத்தின் டிரெய்லரை பார்த்து படக்குழுவினரை சந்தித்து பாராட்டி உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கமித்ரா ரஜினியிடம் வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லரை இன்று மாலை 5 மணிக்கு ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக சங்கமித்ரா பிரசாரம் மேற்கொண்டது கவனிக்கத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்