சினிமாவில் அறிமுகமான சீரியல் நடிகை சல்மா

சீரியலில் நடித்து வரும் சல்மா அருண் தற்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.;

Update:2025-03-08 13:36 IST

சென்னை,

சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மா அருண். ரோகிணியாக சின்னத்திரையில் கலக்கி வரும் சல்மா தற்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

அதன்படி, அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'நிறம் மாறும் உலகில்'. இந்த படத்தில் சல்மா, ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, சல்மா அருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தைப் பேசும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று திரையரங்களில் வெளியானது. 

Tags:    

மேலும் செய்திகள்