'திரையுலகின் தேவசேனா அவர் ' - நடிகை வனிதா

தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "நிழல் குடை" படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-04-26 07:51 IST

சென்னை,

நீண்ட இடைவேலைக்கு பின் தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் "நிழல் குடை". இப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகை வனிதா, 'காதல் கோட்டை' படத்தில் வரும் கமலி கதாபாத்திரம் 80, 90களில் எல்லோருக்குமே பிடிக்கும். அதை யாருமே மறுக்க முடியாது. ஆனால், எனக்கு 'கல்லூரி வாசல்' படத்தில் வரும் பப்ளியான தேவயானியை ரொம்ப பிடிக்கும். வித்தியாசமான தேவயானி அது.

திரையுலகின் தேவசேனா அவர். தளபதி விஜய் சொல்லுவதுபோல, 20 வயதில் ஒரு பெண் ஹீரோயினாக இருப்பது பெரிய விசயம் கிடையாது. ஆனால் 40 வயதிலும் கதாநாயகியாக நிற்பதுதான் பெரிய விஷயம். உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன்' என்றார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்