பெண் குழந்தைக்கு தாயான ''வார் 2'' பட நடிகை
கியாரா அத்வானி தற்போது ''வார் 2'' திரைப்படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாகவும் குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை கியாரா மற்றும் சித்தார்த் தரப்பில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
கியாரா அத்வானி தற்போது ''வார் 2'' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . மறுபுறம், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூருடன் இணைந்து ''பரம சுந்தரி'' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.