சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த அப்டேட்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.;

Update:2025-02-18 08:53 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான 'அமரன்' படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். அதாவது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகயுள்ள இப்படத்தை ஒரு பெரிய இயக்குனர் இயக்குவார் என்றும், அவர் யார் என்று விரைவில் தெரிய வரும் என்றார். இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்