திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவராஜ்குமார்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி சரிதனம் செய்தார்.;

Update:2025-07-28 11:45 IST

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் சிவராஜ்குமார் . இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும், புனீத் ராஜ்குமாரின் சகோதரரும் கூட. இவர் தமிழில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சிவராஜ்குமார், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் "45" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிவராஜ்குமார் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி சரிதனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். கோயில் வெளியே இருந்த ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்