7 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் ''தும்பாட் 2''...

கடந்த ஆண்டு ''தும்பாட்'' படம் ரீ-ரிலீசாகி பெரிய வசூல் செய்தது.;

Update:2025-09-27 08:45 IST

மும்பை,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தும்பாட் (Tumbad) படத்தின் 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாலிவுட் பேன்டஸி ஹாரர் திரைப்படம் தும்பாட். 'பேராசை பெருநஷ்டம்' என்கிற நீதிமொழியை அடிப்படையாக கொண்டு ஹாரர் பேன்டஸி படமாக இதை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் ரஹி அணில் பர்வே.

கடந்த 2018 இல் வெளியான இப்படம் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமில்லாமல், கடந்த ஆண்டு ரீ-ரிலீசாகி பாக்ஸ் ஆபீஸில் பெரிய வசூல் செய்தது.

இந்நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அதன் 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை ஆதேஷ் பிரசாத் இயக்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்